மட்டக்களப்பில் கிணறுகள் வற்றுதல் தொடர்பாக வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை , களுவாஞ்சிக்குடி , கல்லாறு உட்பட்ட பல பகுதிகளில் கிணறு வற்றுவதால் ஆபத்து ஏற்படும் நிலைமை இல்லையென வளிமண்டலவியல் அதிகாரிகளும் , இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் சற்றுமுன் கொழும்பில் தெரிவித்தனர்.

வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி ஷானிக்கா திசாநாயக்க மற்றும் இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரி பிரதீப் கொடிப்பிலி ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு ,

“ இது சாதாரண காலநிலை மாற்றத்தால் வருவதாக நாங்கள் கருதுகிறோம்.பூமியதிர்ச்சி எங்கும் ஏற்படவில்லை.கடலும் உள்வாங்கவில்லை .அதனால் சுனாமி ஆபத்தும் இல்லை.சில நாட்களுக்கு முன்னர் கூடுதலான தண்ணீர் வந்து கிணறுகள் நிறைந்தன என்றும் கேள்விப்பட்டோம். எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்தனர்.