கோவிட்-19 : உயிரிழந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனையின் மீது தாக்குதல்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் கோவிட்-19 வைரஸால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்த மருத்துவமனையை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட அந்த மருத்துவமனை வார்டில், ஏற்கனவே 37 கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

‘’இறந்தவரின் உடலை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மருத்துவனைக்கு அருகிலேயே இறந்தவரின் உறவினர்கள் கூடி இருந்தனர். கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் ஒப்படைக்க முடியாது என்பதால், அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.’’ என அந்த மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.