கொரோனா நிவாரண நிதியத்திற்கு 5 கோடி ரூபாய்களை வழங்கியது மொபிடெல் ஸ்ரீலங்கா ரெலிகொம்!

ஸ்ரீ லங்கா ரெலிகொம் – மொபிடெல் நிறுவனங்களின் தலைவர், இயக்குநர்கள் குழு மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் 5 கோடி ரூபா மதிப்புள்ள காசோலையை COVID – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்.

தற்போதைய நெருக்கடியை நிர்வகிப்பதில் தேசத்தின் முன்னணி தொலைத் தொடர்பு தீர்வு வழங்குநர்களான ஸ்ரீ லங்கா ரெலிகொம் – மொபிடெல் நிறுவனங்கள் முன்னின்று செயற்படுகின்றன.

இந்த நிதி நன்கொடை தவிர, நாட்டின் முக்கிய துறைகளில் பொருளாதார நடவடிக்கைகளை மறுசீரமைப்பு செய்ய உதவும் பொருட்டு ரூபா 350 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி இந்தக் குழு முன்னோடியாக செயற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலங்களில் டேட்டா , குரல் மற்றும் மொபைல் சேவைகளை இடையூறின்றி வழங்கி
மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியுள்ளதாக ரெலிகொம் – மொபிடெல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.