வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல்விழா-மக்கள் செல்லத் தடை!

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இந் நிலையில் தற்போதைய கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாதொடர்பாக (13.05 )நேற்றயநாள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான, வருடாந்த பொங்கல் நிகழ்வு ஜூன் மாதம் 08ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.

அந்தப் பொங்கல் நிகழ்வினை நடாத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால் சமகாலத்தில் நிலவுகின்ற கொரோனா நோய் நிலைமையின் காணமாக உலகத்தோடு நம் ஒத்துப்போகவேண்டிய தேவைபற்றி தெளிவுபடுத்தப்பட்டது.

அதனடிப்படையில் சுகாதாரப் பகுதியின் ஆலோசனைகளை ஏற்று, இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பாரிய பொங்கல்விழாவாக இல்லாமல், பாரம்பரிய ரீதியில்எடுக்கின்ற கிரிகைகளை மாத்திரம் ஆலயத்தில் செய்ய இருக்கின்றோம். – என்றனர்.