முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரல் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஸ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தின் இரண்டாம் நாள் நினைவு கூருதல் நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் மயில்வாகனம் விமலாதரன் தலைமையில் இன்றும் இடம்பெற்றது, இதில் மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் விசுவமடு புன்னைநீராவி கட்சியின் இணைப்பாளரும் கரைச்சிபிரதேசசபை உறுப்பினருமான ஜென்சன், கிளிநொச்சி மாவட்ட. பாரளுமன்ற வேட்ப்பாளர் மாட்டீன் கணபதிப்பிள்ளை, கிளிநொச்சிமாவட்ட இளைஞர் அணித்தலைவர் விக்கினேஸ் ஜான், வட்டக்கச்சிபிரதேச இணைப்பாளரும் கரைச்சிபிரதேசசபை உறுப்பினருமான புவனேஸ்வரன், பொன்நகர்கிராம இணைப்பாளர் வன்னியசிங்கம், மாவட்ட அலுவக செயற்ப்பாட்டாளர் சோபிதன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்லி செலுத்தியுள்ளனர்