திருநெல்வேலி சந்தை நாளை மறுதினம் ஆடியபாதம் வீதியில்…..!

தற்காலிகமாக கலாசாலை வீதியில் இயங்கிவந்த திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை மறுதினம்  ஆடியபாதம் வீதியிலுள்ள தனியார் காணியில் இயங்கும் என்கின்றார் நல்லூர் பிரதேச சபை தவிசாளர்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பொதுச் சந்தைகள் திறப்பதனால் மக்கள் ஒன்று கூடினால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதன் காரணமாக யாழ்ப்பாணத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் வேறு இடங்களில் மக்கள் ஒன்று கூ டாத வண்ணம் சமூக இடைவெளியினை பேணக்க்கூடிய வகையில் மாற்று இடங்களில் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகையில் கீழ்உள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக திருநெல்வேலி  கலாசாலை வீதியில் சந்தை நடவடிக்கைகள் இடம்பெற்று வந்த நிலையில் திருநெல்வேலி கலாமன்ற சனசமூக நிலையத்தினர் குறித்த பகுதியில் சன நெருக்கடி அதிகரித்து காணப்படுவதாகவும் மழை நேரம் என்பதால் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அசௌகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் குறித்த சந்தை சந்தையினை வேறொரு இடத்திற்கு மாற்றுவது சிறந்தது எனவ தெரிவித்து வடமாகாண ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு குறித்த சந்தை இடத்தினை மாற்றி அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்
இதன் காரணமாக நாளைய தினத்திலிருந்து  திருநெல்வேலி   கலாசாலை வீதியில் தற்காலிகமாக இயங்கிய   சந்தையானது திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இயங்க உள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் திருநெல்வேலி சந்தை யானது தற்காலிகமாக இயங்காத நிலையில் அங்கு விற்பனையில் ஈடுபட்ட 35-45 வியாபாரிகள்  கலாசாலை வீதி யில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக  சபையினால் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது எனினும் அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தினரால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க குறித்த இடத்திலிருந்து குறித்த சந்தை வியாபாரிகளை அப்புறப்படுத்தி ஆடியபாதம் வீதி யில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியில் நாளை மறுதினம் இதில் இருந்து சந்தை நடவடிக்கைகள் மாற்று இடத்தில் இடம்பெறும் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.