சாராயக்கடை திறப்பும் சமூக இடைவெளியும்?

சங்கானை மதுபானசாலைக்கு முன்பாக இன்று பகல் 11 மணி தொடக்கம் மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கில் குழுமியிருக்கின்றனர்.

சமூக இடைவெளியை பேணாதவர்கள் மீது தாம் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்த போதிலும் மதுபானசாலைக்கு முன்பாக மதுப் பிரியர்கள் மிக நெருக்கமாக நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் வட்டுக்கோட்டை மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எந்தவொரு உணவகங்களையும் திறப்பதற்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா அபாயம் இதுவரை நீங்காத நிலையில் சாராயக்கடைகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.