கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 869 ஆனது!

கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருந்து மேலும் 6 கொரொனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (11) இரவு 11.55 மணிக்கு சுகாதார அமைச்சு வெளியிட்ட குறிப்பில் இது குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 869 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பாதிக்கப்பட்டவர்கள் கடற்படை சிப்பாய்கள் ஆவர்.
இதுவரை 343 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 517 நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.