தேர்தல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை 18,19 இல்.

பொதுத்தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடத்துவதென்ற தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவிப்பை சட்டவிரோதமானதென அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த, ஏழு அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 18, 19ஆம் திகதிகளில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (11) முடிவு செய்தது.
இன்று காலை, ஜெயந்த ஜெயசூரிய, முர்து பெர்னாண்டோ, துரைராஜா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் அல்லது அதன் உறுப்பினர்கள் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகாது என, நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் கலைக்கப்பட்டது, பொதுத் தேர்தலை ஜூன் 20 இல் நடத்த வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக சட்டத்தரணி சரித குணரத்ன முதன்முதலில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார். அதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள், பொது அமைப்புக்கள் என ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.