இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது?

இலங்கையில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலம் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டமாக கடந்த ஒன்றரை மாதங்கள் அமலில் இருந்த ஊரடங்கு, வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இந்த தகவலை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரான இரா.செல்வராஜா பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்க சட்டமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கொரோனா அச்ச சூழ்நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி ஊரடங்கு சட்டம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட அதேவேளை, சில பகுதிகள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டன.

இலங்கை வரலாற்றில் மக்கள் இன்று வரையான காலம்வரை இவ்வாறு முடங்கியிருக்கவில்லை என மூத்த தமிழ் ஊடகவியலாளர் இரா.செல்வராஜா தெரிவிக்கின்றார்.

இலங்கையில் முதலாவது தடவையாக எப்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது? இலங்கையில் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எவ்வாறு அமைந்திருந்தது? என பலர் மத்தியில் தற்போது கேள்வி எழும்பியுள்ள நிலையில், அந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான காலப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தோம்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இலங்கையில் முதல் முறையாக 1953ஆம் ஆண்டுகளில் ஒரு அமைதியற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, இலங்கையில் முதல் தடவையாக அவசர காலச் சட்டம் அமல்டுத்தப்பட்டு, அன்றைய தினமே முதன் முறையாக நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

                                                                                                             பகுதி 01 பிரதி பிபிசி தமிழ் நன்றி