காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடி வந்த அருட்தந்தை ஈனோக் காலமானார்!

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக தொடர் போராட்டங்களில் முன்நின்று செயற்பட்ட அருட்தந்தை புனிதராஜா ஈனோக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் திட்ட ஆலோசராகவும் அவர் செயற்பட்டுவந்திருந்தார்.

ஆரம்ப கால விடுதலைப் போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர் றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் றக்பி விளையாட்டிலும் தேர்ந்தவர் என்று சபையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அவருடைய இழப்பு தமக்கு பாரிய இழப்பாகும் என்று வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது

https://www.facebook.com/itcthamilnews/videos/245871153138472