இன்றைய இலங்கை கொரோணா நிலவரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதோடு, மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (09) பிற்பகல் 5.30 மணியளவில் 5 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 இலிருந்து 260 ஆக அதிகரித்துள்ளதோடு, 7.30 மணியளவில் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 844 இலிருந்து 847 ஆக அதிகரித்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம் (09) இது வரை கொரோனா வைரஸ் தொற்றிய 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, 20 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன் இன்று இது வரை அடையாளம் காணப்பட்ட 12 பேரும் கடற்படையினர் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 847 பேரில் தற்போது 578 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 260 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 09 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 135 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
—————————————————
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 39 தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் 4,428 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, கொவிட் 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மய்யம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை 6,299 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 409 ஆக அதிகரித்துள்ளது. இன்று அடையாளம் காணப்பட்ட 9 பேரும் கடற்படையினராவர்.
——————————————————————-
இன்று மேலும் 9 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றிற்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 15 பேர் குணமடைந்தனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது.
———————————————————————-
கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் 11 பேர் நேற்று (8) பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவு இரவு 11.35 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது