வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம சேவகர் பிரிவிலுளள  430 குடும்பங்களுக்கும் உலருணவு.

தற்போது கொரோணா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம சேவகர் பிரிவிலுள்ள 430 குடும்பங்களைச் சேர்ந்த 1300 பேருக்கான உலருணவு இன்று காலை 9:30 மணியிலிருந்து வீடு வீடாக சென்று வழங்கி வைக்கப்பட்டது.

இதில் உலருணவு பொதிகளை ஆழியவளை கிராம சேவகர் க.சுபகுமார் ஆரம்பித்து வைத்தார்.அதனை தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன. ஒரு நபருக்கு ரூபா 350/- எனும் அடிப்படையில் 430 குடும்பங்களைச் சேர்ந்த 1300 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது.