போலீசாரின் தாக்குதல் ஒரு காட்டு மிராண்டித்தனமானது.முன்னாள் பா.உ சி.சிறிதரன்.

 

 

அண்மையில் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இடம் பெற்ற போலீசாரின் தாக்குதல் ஒரு காட்டு மிராண்டித்தனமான மிலேச்சத்தனமான செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குறித்த சம்பவம் தொடர்பில் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இந்த சம்பவம் ஒரு சட்டத்திற்கு முரணானது.அந்த மக்களை திட்டமிட்டே பழி தீர்க்க வேண்டும் என்று யாரோ ஒருவருக்காக அல்லது யாரோ சொன்னதிற்க்காக இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்பதுதான் தென்படுகிறது.இதிலும் குறிப்பாக போலீசார் பல வீடியோக்களில் வெளிவந்ததில் அவர்கள் கருத்துக் கொண்ட வார்த்தைகள் நடாத்திய தாக்குதல் என்பன இந்த மக்கள் மீது மனிதாபிமானம் அற்ற முறையில் மனித குலம் பார்த்து வெக்கித் தலை குவியக் கூடிய வகையில் போலீசாரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.இதனை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.