யாழில் திருட்டுக்கும்பலைச்சேர்ந்த 5 பேர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள், வாள் திருட்டுப்போன கோடரி, சைக்கிள், திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய மல்லாகம். உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப் பதிகாரி பிரான்சிஸ். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதவானிடம் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.