தேர்தலுக்கு எதிராக 10 மனுக்கள் தாக்கல்!

பொதுத் தேர்தல் நடத்துவதை ஒத்திவைத்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகனான, சட்டத்தரணி சரித குணரத்ன, ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன், ரீ.எம். பிரேமவர்தன, பேராசிரியர் அன்டன் மீமண, ஏ.எம். ஜிப்ரி, எஸ். சிவகுருநாதன், மஹிந்த ஹத்தக்க, எச்.டி.எஸ்.எப்.டி. ஹேரத், எம்.எஸ். ஜயகொடி ஆகிய 8 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில்,தேசிய மக்கள் சக்தியயின் செயலாளர் நாயகம் முன்னாள் எம்.பி. ரஞ்சித் மத்தும பண்டாரவினாலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அதன் உறுப்பினர்கள், ஜனாதிபதி சட்டத்தரணி பீ.பி. ஜயசுந்தர, சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க, சட்ட மாஅதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்துவதை தடுக்குமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.