யாழ்.வேலணை அராலி சந்தியில் கோர விபத்து..! சாரதி படுகாயம்..

யாழ்.வேலனை அராலி சந்தியில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதி யைவிட்டு விலகி பூவரசம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஹயஸ் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.