வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் விடுவிப்பு!

வவுனியா மகா கச்சக்கொடி கிராமத்தில் விடுமுறையில் வந்த கடற்படை வீரரொருவருக்கு கொரனா தொற்று இருப்பது அண்மையில் அடையாளங்காணப்பட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட கடற்படை வீரரின் உறவினர்களுக்கு கொரனா தொற்று இல்லை என பரிசொதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் அவர்களது மகாகச்சக்கொடியில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் இன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செய்யப்பட்டது.
இன்று மதியம் இச் செயற்பாட்டை பொது சுகாதார பரிசோதகர்கள் ,டங்கிய குழு மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.