யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு  940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில்  யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு  940 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன் தெரிவித்தார்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் குறித்த உதவியானது  அரசாங்கம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளில் இருந்து பெறப்பட்ட நிதி உதவி மற்றும் உலர் உணவுப் பொருட்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில்  820 மில்லியன் ரூபா நிதியானது   448 சிறுநீரக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளடங்களாக ஒரு லட்சத்து  63 ஆயிரத்து 975 குடும்பங்களுக்கு  5000 ரூபா கொடுப்பனவாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 24 மெற்றிக்  தொன் கோதுமை மாவினை 11 ஆயிரம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளி த்துள்ளதாகவும் அரசாங்க தெரிவித்தார்