மகிந்த அழைத்த அலரி மாளிகைக் கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்கும்!

அனைத்து எம்.பி.க்களுக்குமென பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அதத்துள்ள கூட்டத்தில் பங்கேற்பதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாக பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ ஆகியவற்றின் தலைவர்களிடையே இன்று காலை இடம்பெற்ற பேச்சுக்களையடுத்தே இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான காரணத்தை விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை கூட்டமைப்பு வெளியிடும் எனவும் கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்