கொழும்பில் சிக்கியுள்ளோரை அவரவர் ஊர்களுக்கு திருப்பியனுப்பும் பணி ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிக்கியுள்ளோரை அவரவர் ஊர்களுக்கு திருப்பியனுப்பும் பணி ஆரம்பமானது.

முதற்கட்டமாக களனி பகுதியில் இருந்தவர்கள் முறையான சுகாதார பரிசோதனைகளின் பின்னர் ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.

பேலியகொடை ,விஜயகுமாரதுங்க மைதானத்தில் இந்த ஆயத்தப் பணிகள் இன்று காலை நடந்தன.