இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று!

இரத்தினபுரி மாவட்டத்தில் 8 பேர் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 பேர் பரிசோதனை மட்டத்தில் உள்ளதாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அநோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட கொரோனா தொற்று ஒழிப்பு குழு கூட்டம் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுடையோர் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் 8 பேருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது இரத்தினபுரி வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை கண்காணிப்பதற்கு விசேட பொலிஸ் குழுவினரை ஈடுபடுத்தல் மற்றும் PCR பரிசோதனை மேற்கொள்ளல் குறித்தும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், தனிமை படுத்தல் நிலையம் அமைத்தல், நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகளை முறையாக பெற்று கொடுத்தல், எலி காச்சல் குறித்து மருந்துகளை பெற்று கொள்;ளல், உணவகங்களை கண்காணித்தல், ஊரங்கு சட்ட நேரங்களில் சட்டத்தை மதித்து செயல்படாதவர்கiளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல், அத்தியவசியப் பொருட்களை முறையாக பெற்று கொடுத்தல், கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வீட்டுத்தோட்ட வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல், உணவு பொருட்களை குறித்த விலைக்கு விற்பனை செய்தல், சட்ட விரோத மதுபானங்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் விற்பனை செய்வோரை இனங்கண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

மேற்படி கொரோனா தொற்று ஒழிப்பு குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலணி லொக்குபோத்தாகம, சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர, இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அநோஜ் ரொட்ரிகோ, இரத்தினபுரி மாவட்ட பிரதி காவல்துறை அதிகாரி ஏ.எஸ்.சதுன்காஹவத்த உட்பட அரச அதிகாரிகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.