அட்டன் எபோட்ஸிலி குடியிருப்புகளில் தீ!

அட்டன் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட எபோட்சிலி தோட்ட லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 14 குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

எபோட்ஸ்லி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கருகிலுள்ள லயன் குடியிருப்பே இன்று (02/05) இரவு 6.30 மணியளவில் தீ விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் பொதுமக்களும் அட்டன் டிக்கோயா நகரசபை தீயணைப்பு பிரிவினரும் இணைந்து கடும் முயற்சியின் பின்னர் 2 இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

14 குடியிருப்பு தொகுதிகளைக் கொண்ட குறித்த லயன் தொகுதியில் 08 குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குடியிருப்பாளர்களின் உடமைகள் தீயினால் நாசமாகியதுடன் உயிர்சேதங்கள் எதுவும் இல்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

மேலும் பாதிக்கப்பட்ட 50 பேர்வரையிலானோரை தோட்ட மண்டபத்திலும் ஆலயத்திலும் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துவருகிறனர்