வடக்காகினும் தெற்காகினும் மக்கள் வாழ்விடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாதீர்கள்!

மக்கள் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைப்பதனை நிறுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் முகாம்களை அமைப்பதற்கு வடக்கிலுள்ள பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் கோரிய நிலையிலேயே மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகில் மக்கள் அதிகமாக வாழ்வதனால் அங்கு இராணுவ வீரர்களை தங்க வைக்கும் செயற்பாடு பரிசீலிக்கப்பட வேண்டியது எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்காக இருந்தாலும் சரி தெற்காக இருந்தாலும் சரி மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளை இவ்வாறான தனிமைப்படுத்தல் முகாம்கள் அமைப்பதற்கு தெரிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழில் அரச அதிபர் மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.