கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2 லட்சத்தை கடந்தது உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன.உலகளவில் இத்தொற்றால் 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.முதல் முதலில் சீனாவில் கடந்த ஜனவரி 11ஆம் தேதிதான் கொரோனா வைரஸ் தொற்றால் முதல் மரணம் நிகழ்ந்ததாக அந்நாடு கூறியது. சுமார் மூன்றே மாதங்களில் 2 லட்சம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இத்தொற்று பரவல் உள்ளது.இதில் ஐந்து நாடுகளில் 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 53ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இத்தொற்றால் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.