இலங்கை கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கடற்படை உறுப்பினர் 95 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர தெரிவித்துள்ளார்.

இவர்களில்  வெலிசர கடற்படை முகாமில் 68 கடற்படையினரும், விடுமுறையில் சென்றுள்ள 27 கடற்படையினரும் உள்ளடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இதுவரை  17 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள. இவர்களில் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமில் ஒருவரும், 10 பேர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடற்படை வீரர்களும், ஏனையயோர் பற்றிய விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.