வெளிமாவட்டங்களுக்கு செல்லக்கத்திருக்கும் 3 ஆயிரம் பேர்-யாழ் மாவட்ட அரசஅதிபர்

வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வச்திருந்த சுமார் 5 ஆயிரம் பேரில் 3 ஆயிரம் பேர் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் காத்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். கடந்த வாரம் சுமார் 2 ஆயிரம் பேர் கடந்த வாரத்தில் உரிய அனுமதியைப் பெற்று தமது இடங்களுக்குத் திரும்பிச் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தொழில்வாய்ப்புக்காகவும், கல்வி மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவுமே யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். கொரோனா தொற்றையடுத்து தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டமும் அமுல் செய்யப்பட்டமையால் குடாநாட்டுக்குள் முடங்கிப்போயிருந்த இவர்கள் தமது இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்காக பிரதேச செயலகங்கள் மூலமாக விண்ணப்பித்திருந்தார்கள்.

 

இவ்வாறு விண்ணப்பிதிருந்தவர்களில் சுமார் இரண்டாயிரம் பேர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றுவிட்மடார்கள். கடந்த ஐந்து தினங்களும் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த போது யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையிலான பஸ் சேவைகள் நடைபெற்றதால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் சென்றுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இருந்த போதிலும் அடுத்த வாரம் பஸ் சேவை இடம்பெறுமா என்பதையிட்டு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.