கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பட்டினியை சந்திக்கவுள்ள 5 நாடுகள்!

உலகம் முழுவதும் உணவுத் தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்காகலாம் என்கிறது அந்த அமைப்பு.

2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் மோசமான பட்டினி சூழலில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 13.5 கோடி. கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள் முடக்க நிலையை அறிவித்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 26.5 கோடியாக அதிகரிக்கலாம் என்று உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.

உலக மக்கள் யாரும் பசியின் காரணமாக பாதிக்கப்படக்கூடாது என, அவர்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பு 2019 ஆம் ஆண்டில் 230 கோடி அமெரிக்க டாலர்களை நிதியாக பெற்று இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தங்களுடைய செயல்பாடுகளை முறையாக செய்ய வேண்டுமானால் 10 முதல் 12 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 1000 முதல் 1200 கோடி அமெரிக்க டாலர் வரை தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது.

  1. ஏமன்
  2. காங்கோ ஜனநாயகக் குடியரசு
  3. வெனிசுவேலா
  4. தெற்கு சூடான்
  5. ஆஃப்கானிஸ்தான்