சீனாவின் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்!

சீனாவின் ஆய்வுக்கூடத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘எய்ட்ஸ் நோயைப் பற்றிய ஆராய்ச்சிக்காக 2008 ஆம் ஆண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு அறிஞர் லூக் மொன்டாக்னியர், கொரோனா பரவுவதைப் பற்றி பேசினார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சீனாவின் வூஹானில் உள்ள தேசிய உயிரியல் பாதுகாப்பு ஆய்வுக்கூடத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல், ‘எய்ட்ஸ்’ நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

அதற்கான ஆய்வின் போது, கொரோனா நுண்கிருமியை, மனிதர்கள் செயற்கையாகப் படைத்துள்ளனர். அந்த ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்தின் போது, கொரோனா நோய் தொற்று வெளியில் பரவியிருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே குற்றச்சாட்டை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அதை சீனா மறுத்து வந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற நுண்கிருமி ஆய்வாளரும் தெரிவித்திருப்பதால், இதுகுறித்த விசாரணையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.