பிரித்தானியாவில் கொரோனா தொற்றில் பலியான யாழ் சகோதரர்கள்

யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் உலகநாதன் கடந்த  திங்கட்கிழமை கொரோனா தொற்று நோய் காரணமாக பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் சுப்பிரமணியம் அவர்களின் சகோதரரான ஆனந்தன் சுப்பிரமணியம் நேற்று வியாழக்கிழமை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.