சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவு!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை தொடர் அதிகரிப்பை பதிவு செய்து வந்தது.

இந்த நிலையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது காலையில் ஏற்றத்துடன் தொடங்கினாலும் இறுதியில் சற்று வீழ்ச்சியுடனே முடிவடைந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

அதிலும் இன்றோடு மூன்றாவது நாளாக சரியும் சர்வதேச தங்கத்தின் விலையானது தற்போது அவுன்ஸுக்கு 28.7 டொலர் குறைந்து 1,702.85 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது கிட்டதட்ட 1.63% வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த எட்டு சந்தை தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கத்தின் விலையானது, இன்று ஒரே நாளில் 10 கிராம் தங்கத்தின் விலையானது 1,470 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது கிட்டதட்ட 3.11% வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.