கொரோனாவை உருவாக்கியது சீனா-சர்வதேச ஊடகம்!

கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உருவாக்கப்பட்டதென சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வுஹான் நகரத்தில் உள்ள ஆய்வகத்தில் ரகசியமாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ரகசிய அறிக்கையை மேற்கோள் காட்டி Fox நியூஸ் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.

ஒரு வகையான வௌவால் இனத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் வைரஸின் மாறுபாடு ஆய்வகத்தில் ஒரு மனிதனுக்கு செலுத்தப்பட்டு பின்னர் வெளி உலகத்திற்கு அனுப்பப்பட்டதென குறிப்பிட்டு அந்த செய்தி ஊடாக சீனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை விட எந்தவொரு பேரழிவையும் சீனா வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காக கொவிட் 19 வைரஸ் பரப்பப்பட்டுள்ளதென்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இது ஒரு இரசாயன தாக்குதல் அல்ல என்று Fox நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.