இளைஞர்களுக்கிடையில் மோதல் ஒருவர் பலி-அனுராதபுரம்!

கெப்பற்றிப் கொலவ பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இளைஞர்களுக்கிடையிலான குறித்த மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புத்தாண்டு தினமான நேற்று மாலை அநுராதபுரம், கெப்பற்றி கொலவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மது விருந்து கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.இதன்போது அதிக சத்தம் காரணமாக அயல் வீட்டுக்காரர் மது விருந்தில் ஈடுபட்டவர்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார்.இதனையடுத்து ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.இதில் அயல் வீட்டைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெ.செலிட்டர் என்பவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன், கைகலப்பை தடுக்கச் சென்ற, உயிரிழந்தவரின் சகோதரரான 34 வயதுடைய ஜெ.விஜயசுந்தரம் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த கைகலப்பு சம்பவம் தொடர்பில் கெப்பற்றி கொலவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.