பிரித்தானியப் பிரதமர் விரைவில் குணமடைய வாழ்த்திய தமிழ்ச் சிறுவர்கள்.!

கொரோனா நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பிரித்தானியப் பிரதமர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தி பிரித்தானியத் தமிழர்களும், தமிழ்ச் சிறுவர்களும் அனுப்பிய புகைப்பட வாழ்த்து மடல்களின் தொகுப்பு பிரசித்தி வாய்ந்த நாளேடான The Daily Telegraphல் வெளிவந்துள்ளது.

தாயகப் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் WhatsApp தளத்தினூடாகச் இம்மடல்கள் பிரதமர் Boris Johnsonனின் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு முதலில் அக்கட்சியின் Twitter இணையத்தில் தமிழ் மக்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறி வெளியானது. இதனையே The Daily Telegraph தனது 9 ஏப்ரல் நாளிதழில் 2ம், 3ம் பக்கங்களில் பிரசுரித்துள்ளது.