சவுதி அரச குடும்பத்திற்கு கொரோனா தொற்று!

ஆளும் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு டசின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 150 அரச குடும்ப உறுப்பினர்னகளுக்கு கொரோனா வைரஸால் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயது சவுதி இளவரசர் பைசல் பின் பந்தர் பின் அப்துல் அசிஸ் அல் சவுத், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அரச குடும்பத்திற்கு சிகிச்சையளிக்கும் ஒரு வைத்தியசாலையில், மேலதிகமாக 500 படுக்கைகளைத் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான சவுதி இளவரசர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர்ந்து பயணம் செய்தவண்ணம் உள்ள நிலையில், அவர்கள் ஊடாக வைரஸ் நாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.