குடத்தனை வடக்கில் 60 குடும்பங்களிற்க்கான  உலருணவு பொதிகள் வழங்கல்.

வடமராட்சி  கிழக்கு குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக் கழகம்  குடத்தனை வடக்கில் 60 குடும்பங்களிற்க்கான  உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு  நேற்று  மாலை 4:00 மணியளவில் இடம் பெற்றது. தலா ஆறாயிரம் பெறுமதியான உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வு குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டுக்கழக தலைவர் தலைவர் த.நிதேசன்  தலமையில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக கிராம சேவகர் திருமதி தனுசியா பிரதீபன் கழக  செயலாளர் ச.வக்ஸன், பொருளாளர்
ந.கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கிவைத்தனர்.இதற்கான நிதியை புலம்பெயர் உறவுகள் வழங்கியிருந்தமை குறிப்பிட தக்கது.