கொரோனா தொற்றாளர் 190 ஆக அதிகரித்தது!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 190 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 49 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன், 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.