அனைத்து மருந்தகங்களும் திறந்திருக்கும்!

மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இன்று முதல் சகல தினங்களிலும் திறந்திருக்கும் என அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.தற்போதைய நிலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்றிட்டங்களின் ஒரு அங்கமாக நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களை இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்குமாறு ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.அதற்கமைய நாடு முழுவதும் உள்ள ஒசுசல உள்ளிட்ட தனியார் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தன.