மதுசாரத்தை அருந்திய 600 பேர் பலி-கொரோனாவுக்கு மருந்து என நம்பி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து என தவறாக புரிந்துக்கொண்டு அதிக செறிவான மதுசாரத்தை (அல்கஹோல்) அருந்திய ஈரானை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மதுசாரத்தை அருந்திய மேலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக பலரை தாம் கைது செய்துள்ளதாக ஈரான் நீதியமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஸோலாம் ஹோசேன் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச் செயல் மற்றும் மரணங்கள், நபர்களின் வாழ்க்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கைது செய்யப்பட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றி நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஈரானில் 3 ஆயிரத்து 872 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரசுக்கு எதிரான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் மாத்திரமே கண்டுபிடிக்கபட்டுள்ளன.கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து ஈரான் நாடாளுமன்றம் மூடப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் நாடாளுமன்றம் முதல் முறையாக கூடியது