இங்கிலாந்தில் மருத்துவ நிபுணர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பலி!

இங்கிலாந்தில் முதியோருக்கு சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம்மிக்க ஒரு மருத்துவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்துள்ளதாக பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது

70 வயதுடைய டாக்டர் அன்ரன் செபஸ்டியன் பிள்ளை கிங்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பின்னர் சனிக்கிழமை காலமானார்.

1967 ஆம் ஆண்டில் இலங்கையில் மருத்துவராக தகுதி பெற்ற அன்ரன் , தென்மேற்கு லண்டனில் உள்ள மருத்துவமனையுடன் நீண்டகால சேவைத் தொடர்புகளை கொண்டிருந்தார்.

டாக்டர் செபஸ்டியன் பிள்ளை இலங்கையின் பேராதனை மருத்துவ பீடத்தில் பயின்று1967 இல் மருத்துவராகும் தகுதி பெற்றார்.