உலக அளவில் கொரோனாவைரஸ் தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது!

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 46 ஆயிரத்து 566 பேராக உயர்ந்துள்ளது.
இதுவரை உலகளவில் 74 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்து 67 ஆயிரத்து நான்கு பேர் பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் இதுவரை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் இதுவரை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டு 16 ஆயிரத்து 523 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜேர்மனியில் இதுவரை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 375 பேர் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 810 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இதுவரை 98 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்து 911 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 4 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டு 136 பேர் உயிரிழந்துள்ளனர்.