இலங்கை அரசுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த நன் கொடை 38கோடிரூபா விபரம் இதோ!

சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 6.6 கோடி ரூபாய்கள் அன்பளிப்பு; இதுவரை 38 கோடிகள் மொத்தக் கொடை!

கடந்த இரண்டு நாட்களில் – கொவிட் 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 6.6 கோடி ரூபாய்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

அதனோடு சேர்த்து – 314 மில்லியன் ரூபாய்களாக இருந்த மொத்த கொடை தற்போது 38 கோடிகளாக அதிகரித்துள்ளது.

அமைச்சர் டலஸ் அழகப்பெறரும தனது அமைச்சுப் பொறுப்புக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும்;

அமைச்சர் காமினி லொக்குகே ஒரு கோடி ரூபாய்களையும் நேற்று என்னைச் சந்தித்து அன்பளிப்பு செய்தனர்.

தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாவையும்;

தேசிய சேமிப்பு வங்கி;

மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கம் ஆகியன – தலா 2.5 மில்லியன் ரூபாய்களும்;

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 02 மில்லியன் ரூபாய்களையும்;

மலிபன் பிஸ்கட் நிறுவனம் 10 மில்லியன் ரூபாவய்களையும்;

மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை ஒரு மில்லியன் ரூபாய்களையும்;

நேசர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரூபாய்களையும் –

நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தேசிய லொத்தர சபை மற்றும் மலிபன் பிஸ்கட் நிறுவனம் ஆகியோரால் வழங்கப்பட்ட மொத்தம் 3.5 கோடி ரூபாய்களைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று என்னிடம் ஒப்படைத்தார்.

இலங்கை வங்கி தலைமைச் செயலக கிளையின் 85737373 என்ற இலக்கத்தை உடைய ‘கொவிட் 19 – சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்ககு உலகின் எந்த பகுதியில் இருந்தும் எவரும் காசோலை மற்றும் தொலைப்பணப் பரிமாற்று முறைகள் ஊடாக நேரடியாக நிதியினை வைப்பிலிட முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்குச் செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.