வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தால் உதவிகள் வழங்கிவைப்பு.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சுவிஸ் வாழ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தினரால் கொரோண தொற்று காரமணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள்  ஜனநாயக கட்சி ஊடாக வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில் முதல் கட்டைக்காடு வரையான தெரிவு செய்யப்பட்ட சுமார் 150 குடும்பங்கள் வரை உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் மணல்காடு குடத்தனை பொற்ப்பதி உட்பட நான்கு கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர் வழமையாகவே வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியம் மருதங்கேணியை அண்மித்த ஒரு சில கிராமங்களுக்கே உதவிகள் புரிவதாகவும் பலரும் குற்றம் சுமத்தியுள்ளனர்.