யாழில் 15 பேருக்கான பரிசோதனை எவருக்கும் தொற்று இல்லை!

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 பேரின் இரத்த மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதைக்குட்படுத்தப்பட்டன.அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்றவர்கள் என அரியாலை, குருநகர் மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 12 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.அவர்கள் 12 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

எனினும் இலங்கையில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது