அவதானம் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கும்!

இன்று முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அம்பலாங்கொட, தல்கஸ்வல, பஸ்கொட ,மித்தெனிய,உஸ்வெவ மற்றும் வீரவில ஆகிய பகுதிகளில் நண்பகல் 12:13 மணியளவில் சூரியனின் உச்சம்  மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மற்றும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான கன மழை வீழ்ச்சி ஏற்படும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலையில் மூடுபனி நிலவும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் தயவுசெய்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்