உயிரிழப்பு 60,000 ஐ நெருங்குகிறது!

கோவிட்- 19 (கொரொனா) வைரஸ் தாக்கத்தினால் உலகளவில் ஏற்பட்ட உயிரிழப்பு 60,000 ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியன உலகம் ஆபத்தான பொருளாதார நெருக்கடியில் சிக்கவுள்ளதாக எச்சரித்துள்ளன. உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் “ஒரு பெரிய உலகளாவிய மந்தநிலை” ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளைத் தாக்கக்கூடும் என்று கூறினார். அதே நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் நிலைமையை “நெருக்கடி” என்று விவரித்துள்ளது.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, ஐரோப்பாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உயிரிழந்தவகளின் எண்ணிக்கை 7,000 க்கும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் உலகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 நெருங்குகிறது.

இந்தோனேசியா
நேற்றைய நிலவரப்படி, 1,986 பேர் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 181 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக உயிரிழப்பு இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்கா
நேற்று 1,321 பேர் அமெரிக்காவில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,392 பேர் உயிரிழந்தனர். புதிதாக 32,284 பேர் நோய்த் தொற்றிற்கு இலக்காகினர். இதுவரை 277,161 பேர் நோய்த் தொற்றிற்கு இலக்காகினர்.
அமெரிக்கர்கள் சமூக இடைவெளியை பேணவும், முகச்கவசம் அணியவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. ஆனால் முகக்கவசம் அணிவதை தான் பின்பற்றப் போவதில்லையென தெரிவித்துள்ள ட்ரம்ப், N95 முகக்கவசங்களை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்வதை தடைசெய்துள்ளார்.

பிரான்ஸ்
பிரான்ஸில் நேற்று 1,120 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 6,507 பேராக உயர்ந்தது. புதிதாக 5,233 பேர் நோய்த் தொற்றிற்கு இலக்காக, 64,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்
நேற்று ஸ்பெயினில் 850 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மொத்த உயிரிழப்பு 11,198 பேர் யிரிழந்தனர். புதிதாக 7,134 பேர் பாதிக்கப்பட, நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக் 119,199 ஆக உயர்ந்தது.

இத்தாலி
இத்தாலியிர் நேற்று 766 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 14,681 ஆக உயர்ந்தது. புதிதாக 4,585 பேர் தொற்றிற்கு இலக்காக, 119,827 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து
நேற்று 684 பேர் இங்கிலாந்தில் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3605 ஆக உயர்ந்தது. புதிதாக 4,450 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,168 ஆக உயர்ந்தது.

ஜேர்மனி 168, நெதர்லாந்து 148, ஈரான் 134, பெல்ஜியம் 132 என உயிரிழப்புக்கள் பதிவாகின.
நேற்றைய தினத்தில் 5,973 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59,172 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,098,762 ஆக உயர்ந்துள்ளது. 228,923 பேர் குணமடைந்துள்ளனர்.