இலங்கையில் 5வது நபர் உயிரிழப்பு கொரோனாவைரஸ் தொற்றுதான் காரணம்!

இத்தாலியில் இருந்து இலங்கை திரும்பிய ஹோமாகமவை சேர்ந்த நபர் மார்ச் 23 ஆம் திகதி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் 26 ஆம் திகதி அவர் வெலிக்கந்தை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வேறு எந்த நோய்களும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.