அடுத்த சில நாட்கள் இலங்கைக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும்!

அடுத்த சில நாட்கள் இலங்கைக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்குமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், சிகிச்சைக்குட்படுத்தவும் விரைவான பொறிமுறையை நிர்வகிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, சந்தேகிக்கப்படும் நோயாளிகளை பரிசோதிக்க சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா வைரஸ் வைரஸ் பரவுவது தொடர்பாக தமது சங்கம் தெரிவித்த கணிப்புகள் நிறைவேறியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.கொரோனாவின் நான்காம் கட்டமாக சமுகமயப்பட்ட தொற்று மார்ச் 24ம் திகதி முதல் ஆரம்பித்து விட்டது என்றும் தெரிவித்தார்.

இதே வேளை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என்ற நியமங்கள் இருக்கும்போது அது குறித்து ஆராய்ந்து உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கேட்டுள்ளது.

இது தொடர்பில் கடிதம் ஒன்றையும் சங்கம் அனுப்பிவைத்துள்ளது