கொரோனாவைரஸ் தொற்று இலங்கையில் மேலும் ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழந்தார்.
மருதானையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்று நோயாளி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. 74 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.ஐ டி எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது
இத்துடன் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்கி இலங்கையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.