கிளிநொச்சியில் மதுபானசாலைக்கு சீல் வைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அமோகமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்டிருந்த மதுபான விற்பனை நிலையத்துடன் கூடிய விடுதி இன்று பிற்பகல் அதிரடியாக முற்றுகையிடப்பட்டு இழுத்து மூடப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சி- கனகரபுரம் பகுதியில் உள்ள குறித்த விடுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் அமோகமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைவாக விரைந்த பொலிசார் குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.
கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவகஸ்த சிறிசேன தலைமையிலான குழு குறித்த பகுதியை முற்றுகையிட்டது. இதன்புாது குறித்த விடுதியில் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையை அவதானித்த பொலிசார்
குறித்த விடுதியின் மதுபான நிலையத்திற்கு முத்திரையிட்டனர். இதன்போது குறித்த நிலையத்தில் மூவர் நின்றிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் கைதுகள் இடம்பெறாத நிலையில் சம்பவம் தொடர்பில்
உரிமையாளர் மீது வழங்கு தாக்கல் செய்ய உள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர். சட்டவிரோத மது விற்பனை தொடர்பில் மதுவரி திணைக்களத்திடம் குறித்த வழங்கினை பாரப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்த பொலிசார்,நாட்டில் உள்ள சட்டத்தை மீறி செயற்பட்டமை தொடர்பிலும் பொலிசாரால் வழங்கு பதிவு செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.